சலீம் றமீஸ்-
அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர்கள் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட ஆய்வுகூட உதவியாளர் எஸ்.றிபாய்த்தீன் அவர்கள் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர்கள் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவும், சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மேளனத்தின் தேசிய தலைவர் திரு.ஆர்.வீ.ஆர்.பி.தம்பிக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 2014/2015 ஆம் ஆண்டுக்கான புதிய சம்மேளன தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவின் போதே எஸ்.றிபாய்த்தின் இணைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர் சங்கத்தின் இணைப்பாளராகவும் செயல்பட்டு வரும் இவர் பல சமூக சேவை அமைப்புக்களில் தலைவர்,செயலாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 பேரைக் கொண்ட பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர் சம்மேளனத்தின் செயலாற்றுக் குழுவுக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சார்பில் எம்.ஐ.எம்.இஸ்மாயில் (உதவித்தலைவராகவும்), எஸ்.ஜெயகுமார, கே.விஜயகுமார், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து எஸ்.றிபாய்த்தின்(இணைப்பாளர்), எம்.எஸ்.அஹமட், இம்போட்மிரர் சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.வை.அமீர் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment