சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், எம்.ரி. ஹசன் அலி ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி மூலம் ஒலுவில் பிரதேசத்தில் ரூபா 45 இலட்சம் செலவில் பல அபிவிருத்தி திட்டங்கள் நாளை (06) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம். அமானுல்லா தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
அல் - ஜாயிஸா வித்தியாலயத்தில் ரூபா 25 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்று மதில் நுழைவாயிலுக்கான அடிக்கல் நடல், அல் ஹம்றா மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள விளையாட்டு மைதானத்திற்கான அங்குரார்ப்பணம், ரூபா 6 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மீனவர்களுக்கான உபகரணங்கள் வழங்கல் மற்றும் விளையட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல், அல் - அஷ்ஹர் வித்தியாலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்கல் என்பன அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்வுள்ளன.
இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளுர் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments :
Post a Comment