அமைச்சர் உதுமாலெப்பையின் பொத்துவிலுக்கான சேவைகள் அம்மக்களிடம் கையளிப்பு




சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு தொடர்பான மீளாய்வு உயர்மட்டக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத் தலைமையில் இடம் பெற்றது.

இந்த கூட்டத்தின் போது பொத்துவில் பிரதேசத்தில் கடந்த யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன இடங்கள் மற்றும் பாலம்,வீதி அபிவிருத்தி, பணிகள் எதிர்வரும் 02ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் புதியதாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள நீர்ப்பாசன குளங்கள், வீதிகள் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நேரடியாக இவ்விடங்கள் பார்வையிடவும் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.கருணாநாதன், அம்பாறை பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் யு.எல்.ஏ.நஸார், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும்,பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான், பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜீத் குமார, உட்பட உயரதிகாரிகள், விவசாய குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :