இந்த சந்திப்பின் போது இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வில் ஆழமான கருத்துப் பரிமாறல்களை இருவரும் மேற்கொண்டனர்.
இனப் பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பகிர்வின் அவசியம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் இந்த சந்திப்பின் போது இடித்துரைத்தார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முறையாக அமுல் நடத்த வேண்டுமென்பதே இந்திய அரசாங்கத்தின் விருப்பமாகும் என்று தெரிவித்த அவர், இந்திய அரசு தனது அயல் நாடான இலங்கையுடன் நல்லுறவையே பேண விரும்புவதாகவும் இனப் பிரச்சினை இரு நாடுகளின் உறவுகளுக்கும் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதே புதிய இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை இனியும் இழுபடக்கூடாது என தெரிவித்த தேசிய பொதுச் செயலாளர். அரசாங்கமும் தமி;ழ் மக்களும் விட்டுக் கொடுப்புடன் முன் வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார். இதன் போது மு.கா.பிரதித்லைவர் ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை இனப் பிரச்சினை தீர்வில் புறக்கணிக்கப்பட்டதையும் இந்த பிரச்சினை இழுபடுவதற்கு முஸ்லிம்கள் தொடர்பில் அரசாங்கமும் தமிழர் தரப்பும் கரிசனை எடுக்காததே மற்றொரு காரணமென்றார்.
அதன் போது கருத்துத் தெரிவித்த பி.முரளிதர் ராவ் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் இந்தியா ஏற்கனவே கருத்தில் எடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொருத்தமான , எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகள் காணப்பட வேண்டுமெனவும் பி.முரளிதர் ராவ் வலியுறுத்தினார்.
_Copy1.jpg)
0 comments :
Post a Comment