ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு அபிவிருத்தி மன்றம்







பி.எம்.எம்.ஏ.காதர்-

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகப்பிரிவுக்கான 'கிழக்கு அபிவிருத்தி மன்றம்' அங்குரார்ப்பணக் கூட்டமும் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும் இன்று மாலை (28-08-2014) கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி. தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மகநெகும தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கிங்ஸ்லி ரணவக்க கலந்து கொண்டார். 

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேசத்திற்கான அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் மருதமுனை, நற்;பிட்டிமுனை, கல்முனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி மருதமுனை கடற்கரை வீதியை வாகனத் தரிப்பிட வசதியுடன் காபட் வீதியாக நிர்மானிப்பதற்கு முன்மொழிந்தார் கலந்தரையாடலின் இறுதியில் வர்த்தகர் ஏ.ஜே.எல்.அசீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மகநெகும தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கிங்ஸ்லி ரணவக்க அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

பிரதம அதிதி கடற்கரை வீதியையும் பார்வையிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :