சூறா சபை, உலமா சபை போன்ற அமைப்புக்கள் தேவையில்லை -பொது­ப­ல­சேனா

லகம் பூரா­கவும் இன்று முஸ்லிம் பயங்­க­ர­வாதம் தலை­வி­ரித்­தா­டு­கின்றது. எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ்.போகோ ஹராம் மற்றும் ஹமாஸ் பயங்­க­ர­வாதம் தொடர்பில் இலங்­கை­யி­லுள்ள சூறா சபை,உலமா சபை­களின் நிலைப்­பாடு. இதனை ஆத­ரிக்­கின்­றீர்­களா? எதிர்க்­கின்­றீர்­களா என்­பதை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டு­மென சவால் விடுக்கும் பொது­ப­ல­சேனா, அர­பு­லகின் பணத்­துக்கும் எண்­ணெய்க்கும் இலங்­கை­யையும் சிங்­கள – பௌத்­தத்­தையும் காட்­டிக்­கொ­டுக்க முடி­யா­தென்றும் அவ் அமைப்பு தெரி­வித்­தது.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

சூறா சபை மற்றும் உலமா சபைகள் எல்லாம் அரபு நாடு­க­ளி­லேயே இயங்­கு­கின்­றது. அவ்­வா­றான அமைப்­புக்கள் இலங்­கைக்கு தேவை­யில்லை. எனவே, இது தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த சபைகள் உண்­மை­யி­லேயே மனித உரி­மை­களை ஜன­நா­ய­கத்தை மதிக்கும் சபைகள் என்றால் இதனை மீறும் இயக்­கங்கள் தொடர்­பாக தமது எதிர்ப்பை வெளி­யிட வேண்டும்.

இல்லா விட்டால் இந்த பயங்­க­ர­வாத இயக்­கங்­களை ஆத­ரிப்­ப­தா­கவே எண்ண வேண்டி வரும். அவ்­வாறே கருத வேண்டி வரும். அதே­போன்று அர­சாங்க சார்­பற்ற நிறு­வனம்? மனித உரி­மைகள் தொடர்­பாக குரல் கொடுப்­ப­தாக கூறிக்­கொள்ளும் நிமல்கா பெர்­னாண்டோ போன்றோர்.

போகோ ஹராம் இயக்கம் பெண்­களை கடத்தி பாலியல் வர்த்­த­கத்­திற்கு ஈடு­ப­டுத்­து­வது கொலை செய்­வது உட்­பட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் தொடர்­பாக தமது நிலைப்­பா­டு­களை வெளி­யிட வேண்டும்.

உலகில் இன்று முஸ்லிம் பயங்­க­ர­வாதம் தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. கிறிஸ்­த­வர்கள் மிலேச்­சத்­த­ன­மாக கொலை செய்­யப்­ப­டு­கின்­றார்கள். எனவே, அர­பு­லகின் பணத்­திற்­கா­கவும் எண்ணெய் வளத்­திற்­கா­கவும் இலங்­கை­யையும் சிங்­கள பௌத்­தர்­க­ளையும் காட்­டிக்­கொ­டுக்க முடி­யாது.

சர்­வ­தேசம்

அடிப்­ப­டை­வாத சக்­திகள் சர்­வ­தேச ரீதி­யாக எமக்கு எதி­ராக பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இங்­குள்ள ஒரு சிலர் வெளி­நாட்டு தூத­ர­கங்கள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெருந்­தொகை பணத்தைப் பெற்­றுக்­கொண்டு எமக்­கெ­தி­ரான புத்­த­கங்­க­ளையும் தயார்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

எம்­மிடம் இன­வாதம் இல்லை. ஆனால் சிங்­க­ள­வர்­க­ளா­கட்டும் தமி­ழர்­க­ளா­கட்டும் முஸ்­லிம்­க­ளா­கட்டும் அடிப்­ப­டை­வா­தத்தை எதிர்க்­கின்றோம்.

எமது இந்த அலு­வ­ல­கத்தில் அண்­மையில் முஸ்லிம் பிர­மு­கர்கள் சந்­தித்து எம்­மோடு பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்கள். அதன்­போது அவர்­க­ளுக்கு தொழுகை நடத்த இங்கு ஏற்­பா­டு­களை செய்து கொடுத்தோம்.

தர்மம் என்­பது சத்­தியம் ஆகும். இத­னையே நாம் வெளிப்­ப­டுத்­து­கின்றோம். ஒரு சில­ருக்கு இது கசப்­பாக இருக்­கலாம்.

நிறை­வேற்று அதி­காரம்

இதில் அப­ரி­த­மான அதி­கா­ரங்கள் இருப்­ப­தையும் அதனை குறைக்க வேண்­டு­மென்­ப­தையும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாக ஒழிப்­பதால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கப்­போ­வ­தில்­லை­யென்­ப­தையும் இங்கு உண­ரப்­பட வேண்டும். நாட்டில் 10 இலட்­சத்­திற்கு மேல் அரச ஊழி­யர்கள் உள்­ளனர். இவர்­களில் பலர் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கடிதங்களையே மதிப்பதில்லை. நடைமுறைப்படுத்துவதில்லை.

அவ்வாறானதோர் நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்தியா

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் எமக்கு சாதகமாக உள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

(ப.பன்­னீர்­செல்வம் VK)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :