வேட்டி அணிந்து செல்ல அனுமதி தடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் உள்ள அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் சென்றிருந்தார். அவர் வேட்டி அணிந்து சென்றதால், எம்.சி.சி. கிளப்பின் விதிப்படி அவர் அனுமதிக் கப்படவில்லை. இது தமிழகத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. பாரம்பரிய உடைகளை அனுமதிக்காத கிளப்கள் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேட்டி கட்டும் கலாசாரத்தை கட்டுப்படுத்தும் நிலையை நீக்குவதற்கான சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இதற்கு அனைத்து கட்சிகளும் ஏகோபித்த ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்டு 21-ந் தேதி முதல் சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கவர்னர் வழங்கியுள்ளார்.

அவரது ஒப்புதலோடு அந்த சட்டத்தை அரசிதழில் சட்டத்துறை செயலாளர் ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். மனமகிழ் மன்றங்கள், கிளப்கள், ஓட்டல்கள், பல அடுக்கு வர்த்தக வளாகங்கள், மைதானங்கள், கூட்ட அரங்குகள் போன்றவற்றில் வேட்டி போன்ற இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கும் கட்டுப்பாடுகள் இந்த சட்டப்படி நீக்கப்பட்டுவிட்டன. இந்த சட்டத்தை மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
<தி.த>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :