வவுனியாவில் இனங்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் மேற்கொள்ளப்படுவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானஹே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அரசாங்க அதிகாரிகளை கொண்டு தமிழர் நிலங்களில் முஸ்லிம்களை குடியேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது ஏனைய சமூகங்களை அவர் புறக்கணிப்பதாக திலந்த குறிப்பிட்டார்.
இதற்காக அமைச்சர் பலவந்தமாக காணிகளை அபகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இதேபோன்று வில்பத்து சரணாலயத்திலும் அமைச்சர் சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொண்டு வருவதாக திலந்த கூறினார்.
இதனைத்தவிர முல்லைத்தீவு, மன்னார், கந்தளாய் போன்ற இடங்களிலும் அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் தொடர்வதாக திலந்த சுட்டிக்காட்டினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற வவுனியாவை சேர்ந்த சங்கர் கணேஸ் என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக பிரதேச செயலர் தமது சொந்தக்காணியில் தம்மை குடியேற அனுமதி தரவில்லை என்று குற்றம்சுமத்தினார்.
இதன் காரணமாக தாம் வேறு இடம் ஒன்றில் வசித்து வருவதாகவும் கணேஸ் குறிப்பிட்டார்.se
0 comments :
Post a Comment