ISIS இராணுவத்தின் கரங்களில் வீழ்ந்துள்ள அமெரிக்க ஆட்டிலறிகள்..!!



ராக்கில் ISIS தொடராக பல கிராமங்களையும், நகரங்களையும் கைப்பற்றி வருகின்றது. சில நாட்கள் எதிர்ச்சமர் புரியும் ஈராக்கிய இராணுவம் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் தொடர்ந்தும் பின்வாங்கி வருகின்றது. கடந்த மாதம் வட மற்றும் மத்திய ஈராக்கில் ISIS ஆல் கைப்பற்றப்பட்ட இடங்களில் அவர்களிற்கு பெரும் ஆயுதப் புதையல் கி்டைத்துள்ளது.

155mm “M198” ரக howitzer ஆட்டிலறி பீரங்கிகள் 52-ஐ இவர்கள் தம் வசப்படுத்தியுள்ளனர். அது போன்றே 1,500 அமெரிக்க தயாரிப்பான 4,000 Hamvija PKC (அதிபார ரக இயந்திர துப்பாக்கிகளையும்) கைப்பற்றியுள்ளனர். சண்டைகளில் இவை பெரும் வலுச்சேர்க்கும் போர் உபகரணங்கள் ஆகும்.

155மி.மி. ஹோவிட்சர் ஆட்டிலறிகள் மூலமாக 20 மைல்கள் (32 கிலோ மீட்டர்கள்) வரை செல்களை ஏவ முடியும். இந்த நவீன ஆட்டிலறிகளில் GPS சிஸ்டம் இருப்பதனால் தாக்குதலிற்கான இலக்கினை துல்லியமாக குறிபார்த்து சுடமுடியும். தலை நகர் பக்தாத்தின் புற நகர் பகுதிகளை நோக்கி இவை நகர்த்தப்படுமானால் பக்தாத்தின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விடும். அது போலவே இவர்களினால் கைப்பற்றப்பட்ட அதிபார இயந்திர துப்பாக்கிகள் சண்டைக்களங்களில் ஒரு நிமிடத்திற்கு 800 ரவுண்டுகள் சுடும் திறன் படைத்தவை.



இந்த M198 howitzer ஆட்டிலறிகள் அமெரிக்க படையினரின் பயன்பாட்டில் உள்ளவையாகும். ஒரு எம்158 ஆட்டிலறியின் இன்றைய பெறுமதி 532,000 அமெரிக்க டொலர்களாக இருக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் செல்களில் (M-107 NC/DC) எனும் உயர்வெடிப்புத்திறன் கொண்ட மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை வந்து வீழ்ந்து வெடிக்கும் போது அதனை சுற்றியுள்ள 50 மீட்டர் ரேடியேசனை தரைமட்டமாக்கிவிட வல்லவை.

அது போல 100 மீட்டர் ரேடியேசனில் உள்ள அனைத்தையும் தாக்கும் திறன் கொண்டவை. இவற்றில் வைட்பொஸ்பரஸ் புகையினை வளிமண்டலத்தில் கலக்கும் கலவைகள் அடங்கிய குண்டுகளையும் பாவிக்க முடியும். இவை வீழ்ந்து வெடிக்கும் போது அந்த இடத்தில் நெருப்புக்களை ஏற்படுத்தக் கூடியவை. டபுள் பேர்பஸ் பயரிங் முறை மூலம் இதில் கிளஸ்டர் செல்களையும் ஏவ முடியும் என்பது விசேட அம்சமாகும்.

ஈராக்கில் அமெரிக்கா எதற்காக இவற்றை வைத்திருந்தது?, தாங்கள் ஆக்கிரமித்த ஈராக்கிய மண்ணை விட்டு வெளியேறும் போது ஏன் இதனை கொண்டு செல்லவில்லை?, ஈராக்கிய இராணுவத்திற்கு இவை தேவையற்ற அதிபார போர்தளபாடங்களாக உள்ள நிலையில் எதற்காக அவர்கள் வசம் ஒப்படைத்திருந்தது?, எதிர்கால அமெரிக்க வோர் அஜண்டாவில் இவற்றின் பயன்பாடுகள் பற்றிய திட்டங்கள் என்ன? போன்ற கேள்விகளிற்கான பதில்களை பென்டகனினால் மட்டுமே சொல்ல முடியும்.

இந்த கனரக ஆயுதங்கள் ISIS இன் கரங்களில் சிக்கியமை நாளைய ஈராக்கிய சண்டைக் களங்களில் சடுதியான மாற்றங்களை ஏற்படுத்தவல்லன என்பது மட்டும் நிச்சயம். இவை பாகிஸ்த்தான், லெபனான், டுனீசியா, சவுதி அரேபியா போன்ற தேசங்களிற்கு அமெரிக்காவினால் ஏலவே விற்கப்பட்டிருந்தன. வளைகுடா யுத்தத்தின் போது சதாம் ஹுஸைனின் இராணுவத்திற்கு இழப்புக்களை ஏற்படுத்தியது இந்த ஆட்டிலறிகள் தான் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. sm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :