ஊவா மாகாண சபைத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம்கொள்கையளவில் இணங்கியுள்ளன என அகில மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெறுவதற்கு தாம் எல்லா வகையான விட்டுக் கொடுப்புக்கைளையும் மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரித்தார்.இது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி குறிப்பிடும் போது
மலையக முஸ்லிம் கவுன்சில் மற்றும் அ.இ.ம.கா. ஆகியன ஊவா மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் அண்மையில் இடம் பெற்றன. இக்கலந்துரையாடலில் பொதுச்சின்னத்தில் பேட்டியிடுவது தொடர்பாக கொள்கையளவில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
மலையக முஸ்லிம் கவுன்சில் ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவம் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment