விமான விபத்தில் பலியான அப்பாவி பயணிகள்: நெஞ்சைஉருக்கும் புகைப்படங்கள் வெளியீடு


லேசிய 'எம்.எச். 17' விமானம் நடுவானில் வெடித்துச் சிதறி வீழ்ந்த சம்பவத்த்தில் பலியான அப்பாவி பயணிகள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்-17 என்ற விமானம் உக்ரைனுக் கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகளும் மேல் உடல் கருகி பலியாகினர். மேலும் இந்த விமானம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் முதன்முதலாக இந்த விபத்தில் பலியான விமான பயணிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நொறுங்கி விழுந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்பது மைல்கள் தூரத்திற்கு சிதைந்து விழுந்துள்ளதாகவும், மனித உடல்களும் விமானத்தின் எரியும் பாகங்களும் ஆங்காங்கே பயங்கரமாக காட்சியளிப்பதாகவும், பத்திரிகை புகைப்படம் எடுப்பவர்கள் கூறியுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவின் உளவுப்படை அதிகாரிகளே காரணம் என்றும், அவர்கள் கொடுத்த திட்டத்தின்படிதான் விமானம் வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அதிகாரியின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெய்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியான 298 பேர்களில் 80 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் விமானம் கிளம்பிய ஒருசில நிமிடங்கள் தாமதமாக விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டன் தம்பதி இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :