அஸ்ரப் கான்-
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகளோ அல்லது பொது அணிகளோ சுயேட்சைகுழுக்களோ போட்டியிட்டு முஸ்லிம்களுடைய வாக்குகளை சிதறடித்து அரசாங்கத்தை மிக இலகுவாக வெற்றிபெற வைக்கின்ற காய்நகர்த்தல்கள் நடைபெறுவதன் மூலம் எதிர்க்கட்சிகளைத் தோல்வியடையச் செய்ய முடியும். என்ற நிலையில் வங்கரோத்த அரசியல் வியூகம் அமைக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
இதுவியடமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
மாறாக தனியாக முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றபொழுது அது எதிர் மறையான அரசாங்கத்தை வெற்றிபெற வைக்கின்ற பெருநிகழ்வை நிலைமையை ஏற்படுத்தும் என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதன்பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முடிவு எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.இவர் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குடையர் மாத்திரமல்ல, இந்த அரசாங்கத்தின் இனவாதம், பொருட்களின் விலை உயர்வு,குடும்ப ஆட்சி போன்ற விடயங்களை எதிர்த்து குரல் கொடுக்கின்ற ஒருவராகும்.
இவர் பாராளுமன்ற பதவியைத் துறந்து அரசாங்கத்திற்கு எதிராகவும் நாட்டிற்காகவும் மாகாண சபையில் போட்டியிட முன்வந்தமையானது பாராட்டத்தக்க விடயமாகும். ஆகவே முஸ்லிம் கட்சிகள் இந்த அரிய சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்ககள் முஸ்லிம் கட்சிகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட முன்வர வேண்டும். அதனூடாக இனவாதத்திற்கு தூபமிடும் இந்நாட்டின் கட்சிகளுக்கும் தகுந்த பாடம் புகட்ட இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம் மக்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்

0 comments :
Post a Comment