இலங்கைப் பணியாளர்களுக்காக தென் கொரியாவில் வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது. தென் கொரியாவில் தொழிலை நிறைவுசெய்து நாட்டிற்குத் திரும்புகையில், அந்த நாட்டிலேயே பணியாளர்கள் தமக்கான ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிடுகின்றார்.
தென் கொரியாவில் இலங்கை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த சில காலமாக பல்வேறு ஊகங்கள் வெளியானதாக மங்கள ரந்தெனிய கூறினார்.ஆயினும், தென் கொரியாவிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் தொழிலை நிறைவுசெய்து நாடு திரும்பும்போது, அந்த நாட்டிலேயே தமது ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் அந்த நாட்டிலிருந்தே இலங்கையிலுள்ள தமது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதற்கும் வசதிகள் காணப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment