த.நவோஜ்-
வாகரை கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கடந்த 12ம் திகதி சனிக்கிழமை இரவு திருக்கும்பம் வைக்கும் உற்சவத்துடன் ஆரம்பமாகி ஏழு நாட்களாக பூசைகள் இடம்பெற்று வெள்ளிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவத்துடன் சடங்குகள் யாவும் நிறைவு பெற்றது.
இத்தீமிதிப்பு உற்வத்தின் போது வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை நூற்றுக் கணக்கானோர் வருகை தந்து தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
அத்தோடு ஆலய தீர்த்தக் கிணற்றில் தீர்த்தமாடும் உற்சவம் நடைபெற்று, பின்னர் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் காலை ஆலயத்தில் யாக பூசை இடம்பெற்றிருந்தது.
இவ் உற்சவ காலங்களில் பூசைகள் யாவும் ஆலய உற்சவ குருவும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment