கடந்த மாதம் முன்னணி வார இதழ் ஒன்று நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பில் பல சர்ச்சைகளுக்கு நடுவே விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக அறிவித்தது.
இது பலரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தினாலும் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால், சமீபத்தில் நடந்த விழாவில் பேசிய விஜய், நான் பழசையெல்லாம் மறக்க மாட்டேன். நான் எப்போதும் தளபதியாகவே இருக்கிறேன். சூப்பர் ஸ்டார்லாம் அப்புறம்தான் என்று சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் விஜயின் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக வருகிற ஆகஸ்ட் 15ஆம் திகதி மதுரையில் ஒரு பிரமாண்ட விழாவை நடத்தி, அதில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விழாவில் விஜய் அபிமானிகள் மற்றும் இந்திய சினிமா உலகில் இருக்கும் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ளப்போகிறார்களாம். ஆனால் இந்த செய்தி குறித்து விஜய் தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

0 comments :
Post a Comment