பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உடனுழைப்புடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியோரின் அனுசரனையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட இப்தார் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 2014.07.26 ஆம் திகதி அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெரும் இந்த இப்தார் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் றஊப் ஹக்கீம் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உதவித் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வுகளில் மாலை 5.30 மணிக்கு அதிதிகள் வரவேற்கப்பட்டு 5.45 மணிக்கு பிரபல மார்க்க அறிஞரினால் இப்தார் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாலை 6.26 மணிக்கு அதானும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றதையடுத்து மஃரிப் தொழுகைக்குப் பின்னர் பிரதம அதிதி நீதி அமைச்சர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் றஊப் ஹக்கீமின் விஷேட உரையும் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment