சலீம் றமீஸ்-
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் இவ்வருடத்திற்கான இப்தார நிகழ்வு தொடர்பாகவும் உயர்மட்டக் கூட்டமொன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அமைச்சரின் பிரத்தியோக முன்றலில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் உலமாக்கள், முக்கியஸ்தர்கள், தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள், கிராம மட்ட சமூக பிரதி நிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
இந்தக் கூட்டத்தின் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள், மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், மேலும் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
.jpg)

0 comments :
Post a Comment