ரஷ்யாவின் சைபீரியா பிரதேசத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் பகுதி, ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது.
இயற்கை மற்றும் எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியே 'உலகின் கடைசி பகுதி' - End of World என்றும் சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் இங்கு கடந்த சில தினங்களுக்கும் மிகப்பெரிய ராட்சத பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது.இதன் ஆழம் 262அடியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், திடீரென இந்தப் பள்ளம் தோன்றியது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது என்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளம் ஏற்பட காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இதன் ஆழம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். மேலும் இப்பெரும் பள்ளத்தால் உலகத்தின் அழிவின் தொடக்கம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த வாரம் ரஷ்யாவில் திடீரென ஏற்பட்ட பனிக்கட்டி மழைப் பொழிவு அச்சம் ஏற்படுத்திய பரபரப்பின் பின்னர் இப்போது இந்தப் பள்ளம்..
இந்த திடீர்ப் பள்ளத்தின் அதிசய காணொளி இணைப்பு

0 comments :
Post a Comment