கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் “வாழ்வின் ஒளி” வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் நிந்தவூரில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் தலைமையில் நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் போது இப்பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது..jpg)
.jpg)
0 comments :
Post a Comment