பலஸ்தீன், காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக சிறப்புரையாற்றவுள்ளார்.
இஸ்ரேலினால் காஸாவில் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணிக்கு தேசிய நூலக சேவைகள் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் இணைத் தலைவர்களான அதாவுட செனவிரத்ன மற்றும் இம்தியாஸ் பாக்கீர் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment