நவோஜ்-
2014ம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் கிராம மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடல் வாகரை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வே.நவிரதன், செயலக கணக்காளர் செல்வி.கே.தர்மினி, வாழைச்சேனை, வாகரை பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் ப.தவதீபராஜ், செயலக தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஆர்.ஜெயசோபராஜ், பிரதேச சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ்.தயாளன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி உரையாற்றும் போது, அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் மூலமும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியைக் கொண்டு கிராம மட்ட அமைப்புக்கள் வேலைத் திட்டங்களை மேற்கொள்ளும் போது அரச கொள்கைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும், அரச கட்டமைப்புக்களின் நடைமுறைகள் என்ன, உள்ளுர் அமைப்புக்களினதும் மற்றும் கிராம மக்களினதும் பொறுப்புக்களும் கடமைகளும் எவை என்பதனை தெளிவுபடுத்தி இன்றே வேலைக்கான உடன் படிக்கைகளில் கையொப்பம் இடுவதோடு, வேலைகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இக்கலந்துரையாடலில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வே.நவிரதனால் இவ் அமைப்புக்களின் கடமைகள் என்ன, அவற்றை எவ்வாறு திட்டமிடுவது, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது. அத்தோடு செயலக கணக்காளர் செல்வி.கே.தர்மினியால் நிதி திட்டமிடல்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென தெளிவுபடுத்தப்பட்டது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment