உம்ரா கடமைக்காகச் சென்றுள்ள SLMC தலைவர் ஹக்கீம் சவூதி அரேபிய பெரும் புள்ளிகளை சந்திக்க தீர்மானம்

அஸ்லம் எஸ்.மௌலானா-
பு
னித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினர் அரபு நாடுகளின் முக்கிய சில தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிய வருகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், சிரேஷ்ட சட்டத்தரணியும் மு.கா. சர்வதேச விவகார பணிப்பாளருமான ஏ.எம்.பாயிஸ் ஆகியோரே புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக நேற்று சனிக்கிழமை சவூதி அரேபியா பயணமாகியிருந்தனர்.

இவர்கள் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரபு நாடுகள் மற்றும் அமைப்புகளின் சில முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுள் சிலருடனான சந்திப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது அவர்களுக்கு விபரிக்கப்படலாம் என்றும் அத்தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன. எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :