த.நவோஜ்-
இலங்கையில் காப்புறுதித் துறையில் அனுபவம் வாய்ந்த விசாலமான நிறுவனமாக இயங்கி வரும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வாழைச்சேனைக் கிளையானது வாழைச்சேனை நகரில் திறந்து வைக்கப்பட்டது.
விற்பனை முகாமையாளர் உமனோபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் வினியோக பிரதி பொது முகாமையாளர் தர்சன அமரசிங்க கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண வலய முகாமையாளர் ம.ஜெகவண்ணன், யூனியன் அஷ்யூரன்ஸ் தலைமை அலுவலகத்தின் உதவி விற்பனையாளர் கீர்த்தி முணசிங்கே, கிழக்கு வலய ஆளனி இணைப்பு முகாமையாளர் அ.நிரோஷன், மட்டக்களப்பு யூனியன் அஷ்யூரன்ஸ் முகாமையாளர் பிரதீப் வசந்த், திருகோணமலை பிராந்திய முகாமையாளர் விக்னேஸ்வரன், கல்முனை பிராந்திய முகாமையாளர் யூலியன் சசிகுமார், கொமர்ஷல் வங்கி முகாமையாளர், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, யூனியன் அஷ்யூரன்ஸ் பயிற்சி முகாமையாளர் முகுந்தன், யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் வினியோக பிரதி பொது முகாமையாளர் தர்சன அமரசிங்க கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதுவரை காலமும் ஓட்டமாவடியில் இயங்கி வந்த இந்நிறுவனத்தின் அலுவலகம் இனிவரும் காலங்களில் வாழைச்சேனை பிரதான வீதியில் இப்புதிய அலுவலகத்தில இயங்கவுள்ளது.

.jpg)
.jpg)
.jpg)

.jpg)

0 comments :
Post a Comment