எம்.ஜே முஹம்மத் அன்வர்
தேசியத்தலைவர்
ஐக்கிய மக்கள் பேரவை
காசாவில் இடம்பெற்று வரும் மனிதப் படுகொலைகளுக்கு எதிராகவும் முஸ்லீம்களுக்கு எதிராகஉலகளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சதிகளுக்கு எதிராகவும் இந்த வருடத்தின் புனிதம் மிக்க ரமழான் மாதத்தின் இறுதி தினத்தினை முஸ்லீம்களின் பாதுகாப்புக்கான தினமாக பிரகடனப்படுத்தி எல்லா மஸ்ஜித்களும் மிம்பர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும்.அத்துடன்எமது நாட்டின் அமைதிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கப்படவேன்டும் எனவும் ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பிரதேசங்களிலுள்ள பள்ளி வாசல்களுக்கும் வேண்டு கோளினை விடுக்கிறோம்.
இந்த வருடத்தில் முஸ்லீம்கள் மீதான அடக்கு முறைகளும்,காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களும் உலகின் எல்லா பாகங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சீனாவில் நோன்புக்கெதிரான கொடுமைகள் அரங்கேறின, சிவசேன இந்தியாவில் தனது அடக்குமுறையை நோன்புக்கேதிராக பகிரங்கமாகவே கட்டவிழ்த்து விட்டது. இவ்வாறான சந்த ர்ப் பங்களில் எல்லாம் உலக முஸ்லீம்கள் அமைதியின் மக்களாய் உலகிற்கு தம்மை எடுத்துக் காட்டி இருப்பது, ஏக இறைவன் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது.
நாமும் உலக முஸ்லீம்களுடன் இணைந்து கொண்டவர்கள், இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்கு எதிரானவர்கள், எமது மார்க்கத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் எனவே எமது நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை எமது கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு அமைவாக அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் உங்களிடம் வேண்டுகின்றோம். எமது அதீத வேகம் அல்லது களத்தினை புரிந்து கொள்ள முடியாமை போன்ற காரணிகளால் நாம் பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் கூட எமது இழப்புக்களுக்கு காரணங்களாகிவிடலாம். இவ்வாறான சதிகளிலும் துர்ப்பாக்கிய நிலைமைகளிலும் நாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அவனிடம் பாதுகாவல் தேடுவோம்.
நாம் இப்போது ஈத் பித்ர் பெருநாளை நெருங்கி இருக்கின்றோம், எம்மை சுற்றிலும் எங்களை விடவும் கஷ்டமானவர்களும், ஏழைகளும் இருக்கின்றார்கள் அவர்களும் எமது சகோதரர்களே, அவர்கள் மீது நம் அனைவருக்கும் கடமைகள் இருக்கின்றது அவர்களுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் உதவிகளும், ஒத்தாசைகளும் புரியக் கடமைப் பட்டிருக்கின்றோம்.இன்றைய நாளில் எங்களுக்கு எது முடியுமாக இருக்குமோ அதைக்கொண்டு நாம் அவர்களை இறைவன் நாடியபடி திருப்திப்படுத்த முயற்சிப்போம். அந்த வகையில் எமது பெற்றோரும் குடும்பத்தவர்களும் மிக முக்கியமானவர்கள்.அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது எம்மீது கடமையான ஜிஹாத் ஆகும். அவற்றினை நிறைவேற்றிடும் சக்தியினை அல்லாஹ் நமக்கு வழங்க வேண்டும்.
யா அல்லாஹ் புனிதம் மிக்க உன் கடமைகளில் ஒன்றாகிய நோன்பினை நாம் நோற்றவர்களாக உன்னிடம் இறைஞ்சுகின்றோம், எமது நோன்பை அமல்களில் சிறப்பு மிக்கதாக அங்கீகரிப்பாயாக, நாங்கள் உன்னிடமே காவல் தேடுகிறோம், உன்னைக் கொண்டே உலகை பொருந்திக் கொள்கின்றோம். எம்மை நேரான வழியில் செலுத்துவாயாக, உலக முஸ்லீம்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவாயாக, பாலஸ்தீனப் போராளிகளின் நோக்கினை வெற்றி பெறச்செய்வாயாக, அவர்களை முனாபிக்குகளிடம் இருந்தும் பாதுகாத்திடுவாயாக , அங்குள்ள முஸ்லீம்களின் வாழ்வினை பாதுகாத்திடுவாயாக ... யா அல்லாஹ் நாம் உன்னிடமே உதவி தேடுகிறோம், உன்னிடமே மீளக்கூடியவர்களாக இருக்கின்றோம் எம்மை அங்கீகரித்து அருள் செய்வாயாக...

0 comments :
Post a Comment