த.நவோஜ்-
மட்டக்களப்பு ஒக்ஸ்பார்ட் கல்லூரியினால் இம்முறை வணிகப்பிரிவில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வணிகக் கல்வி இலவசக் கருத்தரங்கு தேவநாயகம் மண்டபத்தில் ஒக்ஸ்பார்ட் கல்லூரியின் நிர்வாகப் பணிப்பாளர் மகேந்திரன் நீலவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக தேசிய சேமிப்பு வங்கியின் பிராந்திய முகாமையாளர், எல்.ஜி. அபான்ஸ் காட்சியறையின் முகாமையாளர் எஸ்.சிவா ஆகியோர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
வணிகக் கல்வி கருத்தரங்கில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கருத்தரங்கில் வணிகக்கல்வி பிரபல ஆசிரியரான கே.கே.அரஸினால் விரிவுரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் யூனியன் அசுரன்ஸ், தேசிய சேமிப்பு வங்கி, ஹட்ச், எல்.ஜி. அபான்ஸ் போன்ற நிறுவனங்கள் அனுசரணை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

.jpg)

0 comments :
Post a Comment