நாட்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும், மக்கள் பொருளாதார ரீதியில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
கண்டி கலதெகர பகுதிக்கு சென்றிருந்த போதே, எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.
யுத்தம் நிறைவடையும் வரை எவ்வித நிவாரணங்களையும் தர முடியாது என அன்று கூறினர். யுத்தத்தின் பின்னர் வழங்குவதாக கூறினர். நிவாரணங்களை வழங்க முடியாது என அரசாங்கம் முதலில் கூறியது. எனினும் 1983ஆம் ஆண்டில் இருந்து யுத்தம் நடைபெறும் போதே எமது அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியவில்லை. பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை. நாட்டின் நாளா பகுதியிலும் ஊழல்கள் அதிகரித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் அங்குள்ள ஊழல்களை மறைக்கவே இதனை செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment