எஸ்.அஷ்ரப்கான்-
சமூக கல்வி உளவளத்துணை ஆய்வு நிறுவனத்தின் உயர்சபை அங்கத்தவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் விசேட இப்தார் நிகழ்வும் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை 4.30 மணிக்கு சாய்ந்தமருது இளைஞர் மத்திய நிலையத்தில் (ய+த் சென்றர்) அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர பிரதி முதல்வர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் அவர்களும் கௌரவ அதிதிகளாக அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு ஆலோசகர் டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத், மனிதவள முகாமைத்துவ உத்தியோகத்தர் கே.எம். றிஸ்வி, விசேட அதிதிகளாக அஷ்-ஷெய்க் ஏ.ஆர்.எம். றமீஸ் இஸ்லாஹி, யூத் சென்றர் பிரதம பொறுப்பாளர் எம்.ஐ.ஏ. லத்தீப் ஆகியோரும்; வாஹிதிய்யா அரபிக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம்.எம். நவாஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் எம்.எச்.எம்.ஸக்கி உட்பட உயர்பீட உறுப்பினர்களும், அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு இப்தார் நிகழ்வு இடம்பெற்றதுடன் “இஸ்லாத்தின் பார்வையில் சமூக சேவையின் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் அஷ்-ஷெய்க் ஏ.ஆர்.எம். றமீஸ் (இஸ்லாஹி) விசேட உரையாற்றினார்.
இங்கு சமூக கல்வி உளவளத்துணை ஆய்வு நிறுவனத்தின் உயர்சபை அங்கத்தவர்களாக பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபா, உதவித் தலைவர் எம்.ஜே.எம். அனஸ்,பிரதித் தலைவர் எச்.எம். ஹஸான், பிரதித்தலைவரும்: கலை கலாச்சாரப்பிரிவு பொறுப்பாளருமான ஸாஹிர் கரீம், பொதுச் செயலாளர் ஐ.எல்.ஏ. சதாத், உதவிச் செயலாளர் எம்.ஐ.எம். நியாஸ், பொருளாளரும், கல்வி ஆய்வு பிரிவு பொறுப்பாளருமான ஏ. அனீஸ், உதவிப் பொருளாளர் எம்.எம். ஸியாம், இணைப்புச் செயலாளர் ஏ.எம். அர்ஸாத், தேசிய அமைப்பாளர் எம்.ஐ.எம். ஜிப்ரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை பொறுப்பாளருமான ஐ.எல்.எம். ஸர்ஜூன், ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறைப்பொறுப்பாளர் எஸ்.அஷ்ரப்கான், அனர்த்தம் மற்றும் சமூக விவகாரப்பிரிவு பொறுப்பாளர் ஏ.ஆர்.எம். நபாயிஸ், தொழில் உளவளத்துறை பிரிவு பொறுப்பாளர் ஏ.ஆர். தஹ்லான் ஆகியோரும் தெரிவாகினர்.
மேலும், முக்கிய பிரிவுகளுக்கான ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு ஆலோசகர் டாக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத், கலை கலாச்சாரப்பிரிவு ஆலோசகர்களான கவிஞரும்: ஆசிரியருமான எம்.எம். விஜிலி, வி. பற்பராசா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரப்பிரிவு ஆலோசகர் ஏ.எம்.எம். றஸீன், கலை கலாச்சாரப்பிரிவு ஆலாசகர் ஓய்வு பெற்ற ஆசிரியர் யு.எல். ஆதம்பாவா, உளவளத்துறைப் பிரிவு ஆலோசகர் கே.எம். றிஸ்வி ஆகியோரும், இலங்கையின் பல பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தற்காலிக இணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
.jpg)



0 comments :
Post a Comment