சுவாமி விபுலானந்த அடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் கலை விழா-படங்கள்

த.நவோஜ்-














ட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தினால் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நிறுவகத்தில் பிரமாண்டமான முறையில் நடாத்தியது.

இதன் போது இரண்டாம் நாள் நிகழ்வான சனிக்கிழமை சுவாமி விபுலானந்தரின் புத்தக ஆவணக் காப்பகத்திலுள்ள நூல்கள் மற்றும் உருவச் சித்திரக் கண்காட்சிகள் இடம்பெற்றது.

இங்கு மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவக இராஜதுரை அரங்கில் சுவாமி விபுலானந்த அடிகளின் ஆய்வு அரங்கமும், ஆவண குறுந் திரைப்படம், சுவாமி விபுலானந்தரின் புத்தக ஆவணக் காப்பகத்திலுள்ள நூல்கள், உருவச் சித்திரக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா, சிறப்பு விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ.ஜே.கிறிஷ்டி, கௌரவ விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பிரதிப் பதிவாளர் ஜே.விஜயகுமார்;, முகாமைத்துவ உறுப்பினர் எம்.எம்.ஹரீம் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பிருந்தனர்.

முதல் நிகழ்வாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா ஆகியோர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர். பின்னர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் வெள்ள நிற மல்லிகையோ வேறேந்த மாமலரோ எனும் பாடல் பாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வின் போது இசைத்துறை மாணவர்களால் தாய்த்தமிழ் வணக்கம், நடனத் துறை மாணவர்களால் பூஜா நடனம், இன்னிசை விருந்து, நடனம், இசைப் பாமாலை, வாத்திய விருந்து, தசாவதாரம் நாட்டிய நாடகம், இசைச் சங்கமம், தில்லானா உட்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சுவடிகள் காப்பகம் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களின் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த ஆராய்ச்சி சேவைகள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆய்வு அமர்வு நிறுவக விரிவுரையார்களிடையே இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :