நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மாதுலுவாவே சோபித தேரர் களமிறக்கப்படுவாரானால், 2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு நடந்த கதியே நேரும் என இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதாக ஊகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு மாதுலுவாவே சோபித தேரரின் பெயர் ஊடகங்களில் முன்மொழியப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கலிகமுக பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியுள்ளதாவது ,
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மாதுலுவாவே சோபித தேரர் களமிறக்கப்படவுள்ளார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
அது மாத்திரமன்றி பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என்ற நிலையில் சோபித தேரரும் தெரிவித்து வருகின்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு எதிர்க்கட்சிகளின் தரப்பினரால் உந்தப்பட்டிருந்தார். அதனால் தேர்தல் களத்தில் குதித்த அவர் பல அசௌகரியங்களை சந்தித்தார். சரத் பொன்சேகா என்பவர் சுரண்டப்பட்டு வீசப்பட்ட செல்லுபடியற்றதான லொத்தர் சீட்டுக்கு நிகரானவராகவே காணப்பட்டுவருகின்றார். அந்த வகையில் மாதுலுவாவே சோபித தேரர் பொது வேட்பாளராக களமிறக்கப் படுவாறேயானால் சரத் பொன்சேகாவுக்கு என்ன நடந்ததோ அதுவே சோபித தேரருக்கும் நடக்கும் என்றார்.
0 comments :
Post a Comment