முஸ்லிம்கள் பொய் சொல்லமாட்டார்கள்: பாலித எம்.பி




முஸ்லிம்கள் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெரும தெரிவித்தார்.

அளுத்கம பிரதேச முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஜுன் 15ஆம் திகதி இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது குறித்த பிரதேச முஸ்லிம்களை காப்பற்றியமைக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கு சிலோன் முஸ்லிம் அசெம்பிலியினால் நேற்று பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.கட்டுகாஸ்தோட்டை ரிவர்சைட் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெரும,

“தமது வீடும் உடைமைகளும் பற்றி எரிகின்ற போது கதறி அழுகின்ற தாய்மார்களையும் பாடசாலைப் பிள்ளைகளையும் பார்த்து அவர்களுக்கு நேசக் கரம் நீட்டாத ஒரு மனிதனாக நான் எப்படி இருக்க முடியும்? களுத்துறை மாவட்டத்தில் நடந்தது ஒரு கலவரம் அல்ல. அது ஒரு மதகுருவைப் பின்பற்றும் ஒரு குழு அரச ஆதரவுடன் நடத்திய தாக்குதலாகும்.

கடந்த ஜூன் 15ஆம் திகதி பேருவலை, தர்காநகர், அளுத்கம, வெலப்பன்ன போன்ற இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் அரச ஆதரவுடனும் பொலிஸாரின் ஒத்துழைப்புடனும் நடந்த ஒன்று என்பதை நான் பொறுப்புடன் கூற விரும்புகிறேன். ஏனெனில் அதற்கு பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆதரமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக விபரிக்க முடியாத அளவு பல விடயங்கள் உள்ளன. முக்கியமாக 30 வருட யுத்தத்தை வெற்றி கொண்ட அரசுக்கு ஒரு மத குரு தலைமையிலான சிறு குழுவைக் கட்டுப்படுத்துவது மிக இலகுவான காரியம்.

அதனை அரசு செய்வதில்லை. அன்று அளுத்கம பகுதியில் இருந்த சு10ழ்நிலையைக் கருத்திற்கொண்டு அமைச்சர் ஒருவர் கூட நடைபெற உள்ள பொதுபலசேனாவின் கூட்டத்தை தடைசெய்யுமாறு வேண்டியும் பொலிஸார் அதனைச் செய்யவில்லை. அது மட்டுமல்ல இரண்டாம் இராஜசிங்க மன்னனை ஒரு முஸ்லிம் பெண்மணி தனது உயிரையும் கொடுத்து அரசனைக் காப்பாற்றினாள். அதன் விளைவாகவே மஹியங்கனையில் பங்கரகம்மன என்ற கிராமம் உருவானது. அன்றிலிருந்து முஸ்லிம்கள் ‘மாரெக்கலே’ (என்னைப் பாதுகாத்த இரத்தம் ) என்று அழைக்கப்பட்டனர்.

அந்த சரித்திரம் கூடத் தெரியாத மதகுருதான் ‘அழுத்கம் முதல் தர்கா நகர் வரையுள்ள மரக்கலை கடைகளுக்கு இன்று மாலை அபசரணை’ என்றார். அடுத்த நிமிடமே அவை பற்றி எரிந்தன. களுத்துறைப் பிரதேசத்திலுள்ள பத்திராஜகொடை என்ற கிராமத்தில் உள்ள ஒரு இராணுவ அதிகாரி மிகவும் கடும் போக்குடையவர். அவர் சிங்களத்தை மட்டும் நேசிக்கும் ஒருவர். ஏனைய இனங்களை ஏளனமாகப் பார்ப்பவர். அவர் கூட இச் செயலை வன்மையாகக் கண்டித்தார்.

இது போன்ற உண்மையான பௌத்தர்கள் எவரும் இச்செயலை அனுமதிக்கவில்லை. அப்படியாயின் இத்தாக்குதலை மேற்கொண்டோர் பௌத்த சிங்களவர்கள் அல்ல. குறிப்பிட்ட மதகுருவின் சீடர்களேயாகும். என்னுடன் ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்த போது அரசியல்வாதி என்ற வகையில் நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். தங்கள் வீடுகள் உடைமை பற்றி எரிகிறது. தாய்மார் கதறி அழுகிறார்கள். பாடசாலை செல்லும் ஒரு மாணவி நான் எப்படி பரீட்சை எழுதுவேன் எனக் கதறி அழுகிறாள்.

இப்படியான நேரத்தில் நேசக் கரம் நீட்டாத நான் ஒரு மனிதனாக இருக்க முடியுமா? ஆனால் நடந்ததைப் பாருங்கள். இப்திகார் ஹாஜியாருக்கு 2,000 மேற்பட்ட ஆடுகளைக் கொண்ட ஒரு பன்னை இருந்தது. இது எமது நாட்டிற்கு ஒரு செல்வம். ஒரு வளம். அந்த ஆடுகள் ஒரு முஸ்லிமுக்கு சொந்தம் என்பதற்காக வாய் பேச முடியாத அந்த ஆடுகளை கொள்ளும் அளவு கள் நெஞ்சம படைத்தவர்கள்தான் இந்த பாதகத்தைச் செய்தார்கள்.

யுத்தகாலத்தில் பலர் உயிர் தியாகம் செய்தார்கள். இராணுவத்திலுள்ள முக்கியமான 97 பேர் பல்வேறு சந்தர்பங்களில் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் யார் தெரியுமா? யுத்த காலத்தில் உளவுப் பிரிவு முக்கிய பங்காற்றுகிறது. அதன் தகவலின் படியே யுத்தம் முன் எடுக்கப்படுகிறது. அவ்வாறு புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி முஸ்லிம்கள் 97 பேர் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் மிகப் பெறுமதியானவர்கள்.

இவ்வாறு உயிர் தியாகம் செய்த முஸ்லிம் சமுகத்தை கொச்சைப்படுத்த முடியாது. முஸ்லீம்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் அவற்றை எல்லாம் மறந்து விட்டனர். முஸ்லிம்களது ஒரு விடயத்தில் நான் அவர்களை பாராட்டுகிறேன். முஸ்லிம்கள் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்கள். சமய விடயத்தில் மிக இறுக்கமாக இருப்பார்கள். அதனை சரிவரச் செய்வார்கள். எனவே அந்த விடயத்தில் நான் முஸ்லிம்களுக்கு பயப்படுகிறேன்” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :