ஏழை மக்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வரும் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிகளின் இன்னுமொரு கட்டமாக தொழிலற்று வீடுகளில் முடங்கி கிடக்கும் ஏழைப் பெண்களுக்கு ஏறாவூரில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்தப் பெண்கள் தையல் பயிற்சி பெற்ற பெண்களாக வீடுகளில் இருந்து தமது அன்றாட குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கு வழி சமைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் குல்லியத்துல் தாரில் உலும் அரபிக் கல்ல}ரியல் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் பங்கேற்று இளம் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சவூதி நாட்டின் சபை உறுப்பினரும் அல் ரமீஸ் சர்வதேச குழு தலைவருமான அஸ்ஸெய்க் அப்துல்லா பின் சயிட் அல் மிலெகி ää லைலா உம்மாதீன் நிறவகத்தின் ஸ்தாபத் தலைவரான டாக்டர் செய்னூலாப்தீன் ஹரீஸ்தீன் ஹமீடியா ஆடை விற்பனை நிலைய நிறைவேற்று அதிகாரியுமான முஹமட் பாயிஸ் மற்றும் இந்தியாவின் தொழிலதிபர்களான ராஜசேகர் ஹக்கீ ரெட்டி சுரேந்திரன் கருணாரட்ணம்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் லைலா உம்மாதீன் நிறுவகத்தின் அனுசரணையுடன் மாகாண அமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க 500 விதவைப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன்.
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் லைலா உம்மாதீன் நிறுவகத்தின் அனுசரணையுடன் மாகாண அமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க 500 விதவைப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன்.
இதன் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு வழியின்றி கஷ்டப்படும் விதவைப் பெண்களுக்கு ஆறுதல் கிட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில் எதிர்வரும் காலங்களில் கிழக்கு பிராந்தியத்தில் குறிப்பாக நான் பிறந்த மண்ணான ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து எந்தவொரு பெண்ணும் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக செல்லக் கூடாது என்பது எனது எண்ணமாகும்.
இந்த அடிப்படையிலேயே எனது பணிகளை பணியாற்றி வருகிறேன் என கூறினார்.
பயங்கரவாதத்தின் கொடுமை கிழக்கிலே குறிப்பாக ஏறாவூர் பிரதேச பெண்களை நேரடியாக தாக்கியது இந்தப் பிரதேசத்தில் உள்ள பெண்களின் கணவன்மார்கள் கொல்லப்பட்டு அந்தப் பெண்கள் விதவையாக்கப்பட்டது வரலாறு. பயங்கரவாதத்தின் கோரத்துக்கு அகப்பட்ட நமது சமூதாயத்தில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி ஏறாவூர் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம் கொடூர சம்பவங்களினால் ஏறாவூரி;ன் சுமார் இரண்டாயின் முஸ்லிம் பெண்கள் வாழ்விழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. இந்த குடும்ப தலைவர்கள் அநியாயமான முறையில் உயிரிழந்ததால் அவர்கள் தங்கிருந்த குடும்பங்கள் அன்றாட வாழ்க்கைக்கு வழியின்றி நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியிரு;தனர். இதன் மூலம் பட்டினி ஒரு புறமிருக்கையில் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டது. வறுமை தாண்டவம் ஆடியது.
நான் தேர்தல் காலங்களில் சொல்லியதைப் போன்று இந்த மக்களின் வாழ்வில் படிப்படியான உயர்ச்சியினை மேற்கொண்டு வருகிறேன். நலிவடைந்து கிடக்கும் இந்த மக்களின் வாழ்வை வளப்படுத்துவதே எனது தலையாய பணியாகும்.
அமைச்சரின் ஊடகப்பிரிவு

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment