ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கமைய ஆறு மணி நேர “மனிதாபிமான யுத்த நிறுத்தம்” ஒன்றினை மேற்கொள்வதாக இஸ்ரேலிய அரசு செய்தி வெளியிட்டுள்ளது. வழிந்து ஆரம்பித்த காசா மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் இன்று விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நிலையினை நோக்கி இஸ்ரேலை தள்ளிவிட்டுள்ளது. கடந்த காலங்களை விட இம்முறை இஸ்ரேல் எதிர்பாராத பதிலடியினை ஹமாஸ் வழங்கியிருப்பது இன்று இஸ்ரேலின் உள்ளக அரசியலில் பாரிய நெருக்கடியினைத்தோற்றுவித்துள்ளது.
காற்றுக்கூட அனுமதி இன்றி உட்புக முடியாது என்ற இஸ்ரேலின் அதிகப்பிரசங்கித்தனமும், பாதுகாப்பான பூமி என்ற இறுமாப்புக்கும் இடையில் அத்தனையும் ஹமாசின் ஏவுகணை தாக்குதலினால் பூச்சியமாக்கிவிட்ட வெட்க உணர்வில் இஸ்ரேல் அரசும் இராணுவமும் கதி கலங்கி இருக்கின்றது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பமானத்தில் இருந்து இன்றுவரை 231 பாலஸ்தீன மக்கள் கொள்ளப்பட்டதுள்ளதுடன் 1700பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் தரப்பில் இதுவரை ஒருவர் கொள்ளப்பட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் பகுதிகளில் சட்டவிரோத யூத குடியேற்றத்தை ஊக்குவிக்குமுகமாகவும் குடியேறிய யூதர்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்கவுமே இஸ்ரேல் யுத்த இழப்புக்கள் தொடர்பான செய்திகளை தணிக்கை செய்துள்ளது, என்றபோதும் இழப்புக்கள் பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என உத்தியோகப்பற்றற்ற செய்திகள் குறிப்பிடுகின்றன. தாக்குதலில் இருந்து தற்காப்பு செய்துகொள்வதற்காக இஸ்ரேலினால் வடிமைக்கப்பட்ட பதுங்கு குழி கூடார அமைப்புக்கள் சேதங்களை குறைத்துள்ளதுடன் ஏவுகணை எதிர்ப்பு நிலைகளும் சில ஏவுகனைத்தாக்குதலகளை முரியடித்துமுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் தமது தோல்வியினை மறைத்து யுத்த பொறியில் இருந்து மீள பல்வேறு காரணிகள் உள்ளன.
இரானுவச் சமநிலையினை ஹமாஸ் அமைப்பு இம்முறை பதில் தாக்குதல் மூலம் நிரூபித்தமை :
உலக வல்லரசுகளின் கூட்டு முயற்சியினால் பிறந்து அவற்றின் ஆசிர்வாத அரவணைப்புடன் செயற்படும் ஊட்டப்பிள்ளையான் தொழினுட்பத்தில் முன்னணி நாடு என்ற இறுமாப்புடன் உலகின் சகல விடயங்களிலும் தனது மூக்கை நுழைத்து அச்சுறுத்தல் விடுத்த இஸ்ரேலுக்கு குறுகிய நிலப்பரப்புக்குள் பல்வேறு இருக்குப்பிடிக்குள் முடக்கப்பட்டிருக்கும் ஹமாஸ் விடுத்த பதில் இராணுவ நடவடிக்கை சிம்ம சொற்பனமாக அமைந்து விட்டது. ஹமாசின் பதில் தாக்குதலை பற்றி இஸ்ரேலின் அமெரிகாவிட்கான பிரதான இராஜ தந்திர பிரதிநிதி ரோன் டேர்மர் குறிப்பிடும் போது “ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது இத்தகைய பெருமளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டது முதலாம் உலகப் போரில் பெரிய பிரித்தானியாவிற்கு அடுத்ததாக இன்று இஸ்ரேலாகும்” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தரையுத்த கடவுளாக கருதப்பட்ட மேர்கவா யுத்த டாங்கியை ஹமாசின் கொமாண்டோ படையணி இஸ்ரேலின் சகிம் படை முகாம் ஊடருப்பு தாக்குதலில் நிர்மூலமாக்கியதன் மூலமும் ஹமாசின் ஏவுகனைத்திரன் வீச்செல்லைக்குல் இஸ்ரேலின் முழு நிலப்பரப்பும் வந்து விட்டமையும் ஆளில்லா விமான தொழினுட்பம் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பு தலைமையகம் வரை உளவு நடவடிக்கைகளை ஹமாஸ் மேற்கொண்டமையும் என பல ஹமாசின் படைத்தரப்பு மாற்றங்கள் இஸ்ரேலை நிலை குழையச்செய்துள்ளன.
இஸ்ரேலியர்களின் பலவீனத்தை நாடி பிடித்த ஹமாஸ்:
இஸ்ரேலியர்களின் பிரதான பலவீனமாக, வாழ்க்கை மீதான அதீத பற்றும் மரணம் மீதான பயமும் ஹமாஸிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஹமாசின் தாக்குதல்களை நோக்கும் போது வெறுமனே இஸ்ரேல் அரசு மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இஸ்ரேலியர்களை பலஸ்தீனத்தின் நியாயமான கோரிக்கைக்கு அங்கிகாரம் அழிக்க உந்துவதாகவே அமைந்துள்ளதை அவதானிக்க முடியும். ஹமாஸ் ஏவுகனைத்தாக்குதல்களை மேற்கொள்ளும் முன்னர் தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் குறிப்பிட்டு தாக்குதல் நடாத்தியமை இவ்வுண்மையை கோடிட்டு காட்டுகின்றது.
அத்தோடு ஹமாசினால் ஏவப்பட்ட 1000க்கதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலின் பல பாகங்களுக்கும் ஏவப்பட்டதுடன் இஸ்ரேலின் மறு கோடியான நஹாரியாவிற்கு ஏவுகணை வீசப்பட்டவுடன் ஹமாஸ் ஒரு செய்தியினை இஸ்ரேலின் தொலைத்தொடர்பு நிலையங்களை ஊடறுத்து விட்டிருந்தது. “அனைத்து சியோனிசர்களே உங்கள் மோசமான தலைமைகள் உங்களை அழிவின்பால் வழிநடாத்துகின்றனர். காசாவில் ஒன்றில் மரணம் அல்லது சிறைப்படுவதனையே நீங்கள் எதிர்பாருங்கள்” என்ற வாசகம் இஸ்ரேலின் தலைமையினையும், அதன் ஆக்கிரமிப்பு முயற்சியினையும் கைவிட அழுத்தம் கொடுக்குமாறு இஸ்ரேலியருக்கு கொடுக்கப்பட்ட செய்தியாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையில் ஹமாஸ் ஒரு உளவியல் யுத்தத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது என்பதனை கலரீதியில் ஊகிக்க முடிகின்றது.
இஸ்ரேலின் ஊடக யுத்தம் தோழ்வியடைந்தமை.:
இஸ்ரேல் இம்முறை போர் நிறுத்த முனைப்புக்களில் ஈடுபட காரணங்களில் ஒன்று இம்முறை ஊடக யுத்தத்திலே ஹமாஸிடம் தோற்றுப் போனமையாகும். இதனை வட அமெரிக்க யூத சம்மேளனம் ஏற்பாடு செய்த தொலை பேசி மாநாட்டில் கலந்து கொண்ட ரோன் டேர்மர் “ஹமாஸ் இந்தப்போரில் மக்கள் அபிப்பிராயங்களை வென்று கொள்ளலாம். ஆனால் இஸ்ரேல் காசா சிவிலியன்களை கவனத்தில் கொண்டு செயற்படுகின்றது. இஸ்ரேல் மீது கோபத்தை ஏற்படுத்துமளவுக்கு இஸ்ரேலுக்கெதிராக சமூக வலைத்தளங்கள் செயற்படுகின்றது. அதனை மாற்றியமைக்க நீங்கள் உதவ வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் பொருளாதார பின்னடைவுகள் :
இஸ்ரேல் மேற்கொண்ட வழிந்த தாக்குதல் நடவடிக்கையினால் எதிர்பாராத செலவீனத்தையும் பொருளாதார இழப்புக்களையும் இஸ்ரேல் அரசு எதிர் நோக்கியுள்ளது. இதுவரை 290 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இராணுவ செலவீனமாக ஒரு நாளைக்கு 110 மில்லியன் ஷிகளை தாண்டியுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சுற்றுலாத்துறை ஐம்பது வீதத்தினாலும் வியாபார நடவடிக்கை எழுபது வீத்தத்தினாலும், புகையிரத சேவை இருபது வீதத்தினாலும் விழ்ச்சியடைந்துள்ளது. இத்தகைய உடனடிக்காரனங்களுடன் ஏனைய பல காரணிகள் இஸ்ரேலை ஹமாஸிடம் மண்டியிட வைத்துள்ளது. எனவேதான் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என இஸ்ரேல் அடிக்கடி கூறிவருகின்றது.
தாமாக துவக்கியதை நிறுத்துவதற்கு எகிப்தின் தற்போதைய தலைவர் சீ சீ மூலமாக போர் நிறுத்தம் எனும் பொறி ஹமாஸை நோக்கி வைக்கப்பட்டது.
இதில் பாலஸ்தீன் மக்களை காக்கும் எந்தவொரு பிரதான அம்சக் கோரிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், போர் நிறுத்தம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் ஹமாஸ் கூரி எகிப்தின் வரைபை நிராகரித்தது. குறிப்பாக எகிப்தின் வரைபு பலஸ்தீனத்தை மூன்றாக கூறுபோடும் சதித்திட்டமாகவே ஹமாசினால் கருதப்பட்டது.
ஏனெனில் காசாவின் மேற்கு பலஸ்தீனத்தையும் மேற்கு கரையின் கிழக்கு பலஸ்தீனத்தையும் பிரித்து மூன்று பகுதிகளாக அமைக்க தேவையான அனைத்து சாதக ஏற்பாடுகளும் எகிப்தின் யுத்த நிறுத்த வரைபில் காணப்படுவதாக ஹமாஸ் குறிப்பிடுகின்றது. அத்தோடு 2012ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு மாற்றமாக இஸ்ரேல் பலஸ்தீனர்களை கைது செய்திருப்பதும் இஸ்ரேல் நினைத்த நேரத்தில் யுத்தத்தினை துவக்குவதும் பின்னர் முடிப்பதும் குறித்து எவ்வித ஏற்பாடுகளும் இல்லையென குறிப்பிட்டு ஹமாஸ் நகலை நிராகரித்துள்ளது.
இதன் மறுபுறம் பலஸ்தீனர்கலுக்கு சார்பாக அமைந்திருந்த அதிபர் முர்சி இராணுவத்தளபதியாக இருந்த சீ சியினால் ஜனாதிபதிப் பதவியில் இருந்து பலவந்தமாக அகற்றப்பட்டு ஹமாசுக்கும் முர்சிக்கும் முடிச்சுப்போட்டு ஹமாஸின் வெறுப்பினை சம்பாதித்துக்கொண்டதும் ஆக அனைத்தும் எகிப்தின் போர் நிறுத்த யோசனையை நிராகரிக்க காரணங்களாகும்.
அத்தோடு சிகிச்சை உதவி என்ற போர்வையில் எகிப்தின் உளவுப்பிரிவினர் காசாவுக்குள் ஊடுருவிச்சென்ற பின்னர் ஹமாஸின் முக்கிய இலக்குகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானதும் சி சியின் உண்மை நிலை குறித்து மேலும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.
எனவேதான் ஹமாஸ் துருக்கி தலைமையிலான தீர்வொன்றினை முன்வைக்க முனைகின்றது. இதனடிப்படையகவே துருக்கியப்பிரதமர்இ டியுனீசிய முன்னால் ஜனாதிபதி அல் கனூசி ஆகியோரது முன்மொழிவுகளை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள தயாராகின்றது. மறுகணம் அரபுலகில் சீ சியை ஒரு சமாதான தூதுவராக முஸ்லிம் உலகிற்கு அடையாளப்படுத்தி தமது நிகழ்ச்சி நிரலை புகுத்த இஸ்ரேலும் மேற்கும் முயற்சி மேற்கொள்கின்றன.
ஹமாஸ் முன்வைத்துள்ள நிபந்தனைகள்:
ஹமாஸ் பாலஸ்தின மக்களின் நீண்ட கால உரிமையினையும் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு செயற்படுவதனை அதன் நிபந்தனைகளிளிருந்து அவதனிக்க முடிகின்றது.
குறைந்தது பத்து வருடங்களுக்கான போர் நிறுத்தம்இ பலஸ்தீனுக்கான அனைத்து தடைகளும் (தரைஇ கடல் தடைகள்) அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக தமது அன்றாட பணிகளை மேற்கொள்ள வழியமைத்தல்இ காசா பகுதியில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தல்இ 2012 உடன்படிக்கைக்கு அமைய விடுதலை செய்யப்பட்டு தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படல் போன்ற அம்சக்கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இது குறித்த பேச்சுக்கள் தற்போது கட்டாரில் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருந்த போதும் பங்கர்களில் வாழும் இஸ்ரேலியர்கள் மூச்சுவிடுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும்இ இஸ்ரேலின் மீசையில் மண்படவில்லை என குறிக்கொள்ள சந்தர்ப்பத்தையும் சீ சியால் முடியாததை ஐக்கிய நாடுகளிணுடாக இஸ்ரேலும் மேற்கும் சாதித்துக்கொண்டுள்ளமை இஸ்ரேலை காப்பாற்ற மேற்கும் இ முஸ்லிம் பெயர்தாங்கி அடிவருடிகளும் இருக்கின்றன என்ற உண்மை தெளிவாகின்றது.இத்தகைய பின்புல அரசியலில் இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் தரைவழி யுத்தத்தை ஆரம்பித்திருப்பது அனைத்து கொடிய ஆயுதங்களையும் காசா மக்கள் மீது பிரயோகித்து விட்டு பின்னோக்கி வருவதனையே இலக்காக கொண்டிருக்கும்.

0 comments :
Post a Comment