ஜே.எம். வஸீர்-
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் பின்தங்கிய நிலையில் காணப்படும் 108 உள்ளுராட்சி சபைகள் தெரிவுசெய்யப்பட்டு அச்சபைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்தி அதனூடாக அச்சபைகளை சிறிய அழகிய நகரங்களாக வடிவமைக்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
அதில் ஓர் அங்கமாக சீதாவக்க பிரதேச சபைக்காக 37 மில்லியன் ரூபா பெறுமதியான வாசிகசாலைக்கான அடிக்கல் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நடப்பட்டது.
இவ வாசிகசாலைக்கான கட்டிட வேலைத்திட்டம் 2015 ஏப்ரல் மாதம் மாதம் நிறைவு பெறவுள்ளது. இந்நிகழ்வல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, இன்று உள்@ராட்சித் துறையில் பலதரப்பட்ட அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நோக்கம் உள்ளுராட்சி சபைகள் ஊடாக மக்கள் சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்வதேயாகும். கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்;ப முடியும் என்ற எண்ணக் கருக்கமைவாகவே புறநெகும திட்டம்
எனது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று வருமாணம் குறைந்த 108 சபைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. நமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் கிராமத்தைக் கட்டியெழுப்ப மிகவும் முனைப்புடன் செயற்படுகின்றார்.
இதர்க்காக உள்ளுராட்சி சபைகளின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே சகல உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்த முன்வருமாறு அமைச்சர் தனதுரையில் வேண்டிக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் கீதான்ஜன குனவர்தன இ மாகாண சபை உறுப்பினர் , சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் ஜயந்த ரோஹன , மேல் மாகாண சபை உறுப்பினர் மஹேஸ அல்மேதா உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ. அப்துல் மஜீத், புறநெகும செயற்த்திடடத்தின்பணப்பாளர் ஆனந்த கமகே மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)



0 comments :
Post a Comment