த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு வியாழக்கிழமை நாட்டுக்கு வந்த நிலையில் பிற்பகல் 5 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சபை வீதி கோரகல்லிமடு என்ற விலாசத்தில் வசிக்கும் நான்கு பெண் பிள்ளைகளின் தாயான தங்கராசா ஞானம்மா (வயது 41) என்பவரே சவூதியில் இருந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் நாட்டுக்கு வந்துள்ளார்.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து அம்பூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வாழைச்சேனை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த வருடம் 2012.12.19ம் திகதி சந்திவெளியில் உள்ள முகவர் ஒருவர் மூலம் கொழும்பில் உள்ள முகவர் நிலையத்தினால் தான் வெளிநாட்டுக்கு தனது குடும்பக் கஷ்டத்தினால் சென்றதாகவும், அங்கு சென்றதில் இருந்து எனக்கு சம்பளம் தராமல் துன்புறுத்தியதாகவும், தனது சம்பளத்தை கேட்டு கஷ்டப்படுத்தியதில் மூன்று மாதச் சம்பளம் நாட்டுக்கு அனுப்பியதாகவும், எனக்கு அடித்து படியில் இருந்து தள்ளிவிடும் போது எனது கால் உடைந்ததாகவும், பாதிக்கப்பட்ட தங்கராசா ஞானம்மா தெரிவித்தார்.வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உதவியுடன் நாட்டுக்கு வந்ததாகவும் அவர்களே என்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு கால் முழுமையாக இயங்க முடியாத நிலையில் தற்சமயம் மற்றைய காலும் செயழிழந்திருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக வைத்தியசாலைப் பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் வாக்கு மூலத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment