எம்.எம்.ஏ.ஸமட்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ‘வாழ்வின் ஒளி’ வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் 5ஆம் கட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளன.
சனிக்கிழமை 19ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வாழ்வின் ஒளி வாழ்வாதார உதவி வழங்கும் வைபவத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.அத்துடன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும் மாகாண சபை உறுப்பினர் எம்.எல். அமீர் விஷேட அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், இவ்வைபவத்தின் போது தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்கு பல வாழ்வாதார உதவிகள் வாழ்வின் ஒளி நிகழ்ச்சித்திட்டத்தின் 5ஆம் கட்டத்தினூடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment