முஸ்லிம்களின் மத உரிமைகளை வென்றெடுப்பதற்காக எனது இறுதி மூச்சு வரை போராடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இந்நாட்டின் ஒற்றுமைக்காகப் போராடுவதன் காரணமாக ஒரு சிலர் என்னை விமர்சிக்கின்றார்கள். முஸ்லிம் என்ற வகையில் மார்க்கக் கடமைகளைப் பேணி நடப்பதில் நான் முன்னணியில் இருக்கிறேன். நான் முதலிலும் முஸ்லிம் இறுதியிலும் முஸ்லிம். அறுபதாண்டு கால அரசியலைப் பூர்த்தி செய்திருக்கிறேன். 1989 ஆம் ஆண்டு இந்த பாராளுமன்றத்திற்கு நான் காலடி எடுத்து வைத்தேன். அன்று முதல் இன்றுவரை தான் சார்ந்த சமுதாயத்துக்காக குரல் கொடுத்துவருகிறேன். எச் சந்தர்ப்பத்திலும் சமுதாயத்தைக் காட்டிக் கொடுத்த வரலாறு எனக்கு இல்லை.
இந்நிலையில்,ஒரு சில விஷமிகள் குறுந்தகவல் மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். இத்தகையோர் இஸ்லாம் பற்றி பூரண அறிவில்லாதவர்களாக உள்ளனர். நான் ஒரு போதும் சமுதாயத்தை காட்டிக்கொடுத்தது கிடையாது. குற்றமிழைக்காத ஒருவர் மீது அநியாயமாக வசைபாடினால் அம்மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படுமென இஸ்லாம் கூறுகிறது. எனவே, இவர்கள் முன்பின் தெரியாமல் எம்மை சபிக்கின்றனர். இத்தகையவர்களுக்கு அல்லாஹுதஆலா இஸ்லாம் குறித்த பூரண விளக்கத்தை கொடுக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். நான் எங்கிருந்தாலும் முஸ்லிம்களின் மத உரிமைகளை வென்றெடுப்பதற்காக இறுதி மூச்சுவரை போராடுவேன் என்றார்.
வீ

0 comments :
Post a Comment