மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்கள முஸ்லிம் கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 15.07.2013 செய்வாய்க்கிழமை நாளை பிற்பகல் 5.00 மணிக்கு மட்டக்களப்பு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலில் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் தலைமையில் நடைபெறவுள்ளதாக மட்டு - முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் பொருளாளர் சமூக சேவையாளர் அஹமட் லெப்பை மீராசாஹிப் தெரிவித்தார்.
இவ் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் தமிழ்-சிங்களம் முஸ்லிம் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு உயரதிகாரிகள் உலமாக்கள் வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வருடா வருடம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்றுவந்ததோடு கடந்த 2013ம் வருடம் ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment