பீனிக்ஸ் பறவைபோல் தமிழ் மக்களிடம் காணப்படும் போராட்ட குணம் முஸ்லிம் மக்களிடம் இல்லாததையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன். தங்கள் மீது தொடர்ந்து நடைபெற்றுவரும் அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார்கள். சிறுபான்மையினராகிய நாம் ஒன்றுபட்டாலே இந்த அரசின் அடக்கு முறைகளிலிருந்து மீள முடியும் என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 ஆவது சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
ஒரு ஆற்றுக்குள் இருக்கும் கருங்கல்போன்றே முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்துடன் உள்ளது. ஆற்றுக்குள் கருங்கல் மூழ்கியிருந்தாலும் அதனுள் நீர்புக முடியாது. அவ்வாறே முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் இணைந்திருந்தாலும் அவ் அரசாங்கத்தின் அடாவடிச் செயற்பாடுகளுக்கு இணங்கிப் போகாமல் இருந்து வருகின்றது.
இது முஸ்லிம் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நன்கு தெரியும். கிழக்கு மாகாண சபை ஆட்சியமைக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மோடு இணைந்து ஆட்சியமைக்
குமாறு அழைப்பு விடுத்தனர். அத்துடன் முதலமைச்சர் பதவியையும் விரும்பிய அமைச்சுப் பதவிகளையும் தருவ தாகத் தெரிவித்தனர். அப்போது அரசுடன் இணைந்து செயற்படுவோம் என்ற நப்பாசையுடன் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்து நாம் அரசாங்கத்துடன் இணைந்து
கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைத்தோம்.
வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலேயே சில நிபந்தனைகளுடன் அன்று அரசாங்கத்துடன் இணங்கிப் போனோம்.
இவ்வாறு நாம் அரசுடன் நல்லெண்ணத்துடனும் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாக செயற்பட இணங்கிப்போன பின்னரும் முஸ்லிம் மக்கள் அச்சப்படும் வகையில் பல சம்பவங்கள் அங்கு நடந்தேறியுள்ளன. இன்றுவரை 300 இற்கும் மேற்பட்ட அச்சமான சம்பவங்கள் சிங்கள இனவாதிகளினால் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல் தெற்கிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் நாம் தற்போது எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதற்கான மாற்று யோசனைகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் மக்க
ளைப் போல் நாமும் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஓர் நிலையான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
தமிழ், முஸ்லிம் மக்களின் இறுதிநிலை என்ன என்ற கட்டத்தை நோக்கி நாம் இன்
னும் பயணிக்கவில்லை. விரைவில் அதைநோக்கி நாம் செல்ல வேண்டும்.
இது தொடர்பில் நாம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி ஒரு தீர்மானத்துக்கு வரு
வோம் என்றார்.
0 comments :
Post a Comment