இலங்கையை பொருத்தவரையில் ஊடகங்களுக்கு எந்தவொரு சுதந்திரமும் இல்லை. இன்று வெளிநாடுகளை பொருத்தவரையில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தில் மண்ணளவுகூட இலங்கையில் வழங்கப்படுவதில்லை என்றுதான் சொல்லலாம்
இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது முற்றிலும் இழக்கப்பட்டு வருகின்றது இவ் ஜனநாயக நாட்டில் சுதந்திரமான முறையில் கருத்துக்களை முன்வைக்க முடியாத நிலையில் இன்று பல ஊடகங்கள் முடங்கிக்கிடக்கின்றன.
அந்தவகையில் இன்று பார்க்கும்போது உலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல்தான் என்று கூறலாம், காரணம் அந்தளவுக்கு இன்று ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.
இன்று நாட்டில் நடக்கும் உண்மைக்கு உண்மையான விடையங்களை வெளிக்கொண்டுவர முடியாத நிலையில் இன்று ஊடகவியலாளர் அச்சமடைகின்றனர். காரணம் இன்று இலங்கையை பொருத்தவரையில் ஊடகங்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லாமையே.
ஊடகவியலாளர்கள் தமது பணிகள் காரணமாக இலங்கை முழுவதும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கடினமான பின்னணியில் தமது பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் அதிகமாகவே நடந்துகொண்டு வருவதை சற்று அறியமுடிகின்றது. வருடாந்தம் எத்தனை ஊடகவியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்..
எத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்..
எத்தனைபேர் சித்திரவதை,மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டுள்ளார்கள் எத்தனை அப்பாவி ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்..
சர்வதேசரீதியாக என்னதான் மனித உரிமை,மனிதாபிமானம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும்பேனாக்கள்,கமெராக்கள்,ஒலிவாங்கிகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்டு,திருகப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தகவல்களை வெளியிடும் உரிமைகள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
எழுதும் கைகள் முறித்துப் போடப்பட்டுள்ளன பல பேர் மிரட்டலிலேயே அடங்கி தம் எழுத்துக்கள்,கருத்துக்களை முடமாக்கியுள்ளனர்.
என்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.
அடக்குமுறைகளை வெளிக்கொண்டுவரவேண்டிய பணி அடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
முஹம்மட் ஜெலீல்

.jpg)
0 comments :
Post a Comment