கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, சமூகசேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் ஏற்பாட்டிலான மாபெரும் இப்தார் நிகழ்வு எதிர்வரும் 2014.07.24ந் திகதி வியாழக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.சீ.பைசால் காசீம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல், மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் தலைவர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், நம்பிக்கையாளர் சபைத் தலைவர்கள், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், தொண்டர்கள், தோழர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொணடு சிறப்பிக்கவுள்ளனர்.

0 comments :
Post a Comment