ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பதவி விலகவுள்ளார்.
எதிர்வரும் உவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஹரீன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
பொதுமக்களும் ஆதரவாளர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஹரீன் பெர்னாண்டோ தேர்தலில் போட்டியிட உள்ளார்.
அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment