நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ஹக்கீமின் காதில் பிடித்து அவரை வெளியே வீசியிருப்பேன்-ஞானசார தேரர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை உடனடியாக அமைச்சரவையில் இருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என பெளத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அரசாங்கம் செயல்படாவிட்டால் அரசாங்கம் அடுத்த தேர்தலில் சிங்கள பௌத்தர்களின் ஆதரவை இழக்கும். பெளத்த மதத்துக்கு ஹக்கீம் இழிவை ஏற்படுத்துகிறார் . ஹக்கீமை மஹிந்த ராஜபக்ஷ கையாளும் விதம் வெட்கம் நிறைந்ததாகும். நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ஹக்கீமின் காதில் பிடித்து அவரை வெளியே வீசியிருப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ஹக்கீம் வெளியிடும் தகவல்கள் மூலமாக பெளத்த பிக்குகள் மீது சேதத்தை ஏற்படுத்துகிறார். முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதத்தை பரப்புகிறார். ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரகன். அளுத்கம சம்பவம் தொடர்பில் வீடுவீடாக சென்று முஸ்லிம்கள் பிழையான தகல்வகளை பரப்பியுள்ளமை தொடர்பில் உண்மை நிலையை தெளிவுபடுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுதொடர்பில் உரையாற்றிய பொதுபலசேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இந்த நாட்டில் “முஸ்லிம் அடிப்படைவாதிகள் , முஸ்லிம் பயங்கரவாதிகள்” உள்ளனர் அவர்கள் ஆயுதங்களுடன் உள்ளனர் எனவும் தெரிவித்து அமைச்சர் ஹக்கீமை தம்முடன் நேரடியாக விவாததுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :