பொத்துவில் தென்னாபிரிக்கா கிராம மக்களின் குடிநீர் இணைப்பு

(ஏ.எல்.ஜனூவர்)

மிகவும் கஷ்டப் பிரதேசமான பொத்துவில் தென்னாபிரிக்கா கிராம மக்களின் குடிநீர் வசதி கருதி இம்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அமைச்சர் அவர்கள் தனது அமைச்சினூடாக 13மில்லியன் நிதியின் மூலம் இவ் நீர் இணைப்பு வசதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அண்மையில் இவ் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மிக விரைவில் இப்பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை வழங்குவதாக குறிப்பிட்டார். அமைச்சருடன் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பதுர்கான், கிழக்கு மாகான பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யூ.எல்.ஏ.நசார், பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பீடிஎ.ஜெயக்குமார், தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுஜிதரன் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :