புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியினால் நாடாளவிய ரீதியில் பெண்கள் இணைப்பாளர்கள் நியமனம்



புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி, தங்களின் செயற்பாடுகளை நாடாளவிய ரீதியில் விரிவுபடுத்தும் நோக்கில், இம்மாதம் முழுவதும் இணைப்பாளர்களை நியமிக்கும் முக்கிய நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.

இந்த முயற்சியின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைப்பின் செயல் திட்டங்களைச் செயல்படுத்தவும், பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா தெரிவித்துள்ளார். சமூக, கலாச்சார மற்றும் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் தொடக்கம் முதல் நடைபெற்று வரும் இந்த நியமன செயல்முறையின் கீழ், இதுவரை அநுராதபுரம், கண்டி, நுவரேலியா, கம்பஹா மற்றும் ஹட்டன் மாவட்டங்களுக்கு இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்த வாய்ப்பு திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இணைய ஆர்வமுள்ள பெண்கள், மேலதிக தகவல்களைப் பெறவும், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு மகளிர் அணி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முயற்சி, பெண்களின் சமூக பங்களிப்பை மேம்படுத்துவதோடு, அவர்களின் தலைமைத்துவ திறன்களை வெளிக்கொணரும் ஒரு முக்கிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :