
நடிகை கனகா தனது சொத்துக்களை அபகரிக்க சிலர் முயல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நடிகர் சங்கம் செய்யும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உறுதியளித்துள்ளார்.
நடிகை கனகாவுக்கு புற்றுநோய் என்றும், கேரளாவில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் வதந்திகள் வெளியாகின.
அதன் உச்ச கட்டமாக அவர் உயிரிழந்து விட்டார் என ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன.
இந்தநிலையில் கனகா தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாகவும் அவரே செய்தியாளர்களைக் கூட்டி தெரிவித்ததால் பதட்டம் தணிந்தது.
இதன்போது கனகா பேசுகையில் தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவருக்கு உதவ நடிகர் சங்கம் முன்வந்துள்ளது.
கனகாவுக்கு என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதை செய்து தர நடிகர் சங்கம் தயாராக உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தனது உதவியாளர் நடேசனை கனகாவிடம் அனுப்பி வைத்த சரத்குமார், இந்தத் தகவலை கனகாவிடம் தெரிவித்தார்.
கனகா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது சொத்துப் பறிப்பு குறித்து அவர் புகார் கூறியுள்ளதால் அடுத்தடுத்து பல்வேறு விவகாரங்கள் கிளம்பும் என்று தெரிகிறது.
0 comments :
Post a Comment