தனது காதல் மனைவியுடன் பொலிஸில் சரணடைந்த இலங்கை அகதி மாணவன்


பெற்றோரால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில் இலங்கை அகதி மாணவரும் கேரளாவைச் சேர்ந்த அவரின் காதல் மனைவியும் இராமேஸ்வரம் பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

19 வயதான ஸ்டெபி எங்கெஸ் என்ற கேரள மாணவியும், 20 வயதான கஜேந்திரன் என்ற இலங்கை மாணவனுமே சரணடைந்தவர்களாவர்.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பல் மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் இருவரும் சமீபத்தில் பழனி முருகன் கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், குறித்த மாணவியின் தந்தையான இராணுவ அதிகாரி தமது மகளைக் காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து தமது பெற்றோரால் தங்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்திலேயே தாம் இருவரும் சரணடைந்ததாக கேரள மாணவி இராமேஸ்வரம் பெண் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :