முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் கொலை 3ஆம் சந்தேக நபர் பிரதி பொலிஸ்மா அதிபர்

ம்பலப்பிட்டி முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் 'ஐபேட்டை' கொழும்பு பல்கலையில் பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப்பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாணி அபேசேகர நீதிமன்றில் தெரிவித்தார்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நீதிவான் எம்.எம்.சஹாப்தீனிடம் குறித்த கொலை வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையினை கையளித்து நீதிவான் முன்னிலையில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது சாணி அபேசேகர மேலும் பல விடயங்களை மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். கொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான மொஹம்மட் சியாமினுடைய WP - AV 3639 என்ற இலக்கத்தை உடைய கார் மீதான இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் வாஸின் மகனான ரவிந்துவை கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரவிந்து குணவர்தனவை கைது செய்ய பல்வேறு இடங்களிலும் தேடுதல் நடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் அங்கு உள்ளார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான விஸ்வராஜ் கோரள சிறைச்சாலைக்குள் கடும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவருக்கு அங்கு உயிராபத்து உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது.

குறித்த சிறைகளில் உள்ள சக கைதிகள், சிறைக் காவலர்கள், பார்க்க வருகை தரும் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இந்த அச்சுறுத்தல் உள்ளதாக சாணி அபேசேகர மன்றில் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசி மற்றும் தொடர்பாடல் கருவிகள் சிலவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே வாஸின் 'ஐபேர்ட்டை' அவரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென அவரது சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய முன்வைத்த கோரிக்கையை மன்றம் நிராகரித்தது.
முதலாவது சந்தேக நபர் விஸ்வராஜ் கோரளே இரண்டாவது சந்தேக நபர் பெளஸ்டீன் ஆகியோரின் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சிறைச்சாலை நிர்வாகத்தை கேட்டுக்கொண்ட நீதிமன்றம் அவர்களது பாதுகாப்பு குறித்து விசேட அவதானம் செலுத்தி அவர்களை பாதுகாப்பான சிறையறைகளில் வைக்கவும் உத்தரவிட்டது.

அத்துடன் 4, 5, 6 ஆம் சந்தேக நபர்களிடம் மஹர நீதிமன்றில் இடம்பெறும் 15 இலட்ச ரூபாவை பலாத்காரமாக நபரொருவரிடம் இருந்து பெற்றமை தொடர்பான வழக்கு தொடர்பில் வாக்குமூலம் பெற மாதவ குணவர்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்குமாறும் நீதிவான் எம்.எம்.சஹாப்தீன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த wp-tc 4876 என்ற இலக்கத்தையுடைய வேனையும் பகுப்பாய்வு நடவடிக்கைகள் நிறைவு பெறின் அதன் உரிமையாளரான பிரசாந்த எதிரிசிங்கவிடம் கையளிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை குற்றப் புலனாய்வுப்பிரிவின் ஆலோசனைக்கமைய நீதிவான் அங்கீகரித்தார்.

இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :