பாதுகாப்புச் செயலாளர் ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகளுடன் ஒருபக்கத்தில் பேச்சுவாரத்தை நடத்திக்கொண்டு மறுபக்கத்தில் தமது இராணுவத்தைப் பயன்படுத்தி
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மிலேச்சத் தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் றபர் குண்டு துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவின் பிரதானியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் மாத்தறையில் இன்று (01) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தமக்கு திராவகம் கலந்த தண்ணீரைப் பருக முடியாததன் காரணமாக தூய தண்ணீர் துளியையாவது தருமாறு கோரி பல நாட்களாக இருந்து வீதிகளுக்கு இறங்கி போராட்டம் நடத்தும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இன்று பிற்பகல் 2.30க்கு பாகாப்பு அமைச்சுக்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ஷவினால் தகவல் அனுப்பப்பட்டதாகவும், அதன்படி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக பிரதிநிதிகள் அங்கு சென்றிருந்த காலப்பகுதிக்குள் இராணுவ ஆடை அணிந்து மற்றும் சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிலேச்சத்தனமாக தடிகளாலும், துப்பாக்கிகளாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இராணுவ ஜீப் வண்டி ஒன்றயொன்றின் மேல் பகுதியில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி 'ஐந்து நிமிடங்கள் கழிவதற்குள் இந்த வீதியை விட்டு அகன்று போகுமாறும் அவ்வாறு போகவில்லையென்றால் தாக்கப்படுவீர்கள்" என சத்தமிட்டுள்ளதாக தெரிவித்த சமரவீர, ஊடகவியலாளர்களுக்கும், புகைப்படம் எடுப்பவர்கள் மற்றும் ஒளிப்பதிவு செய்பவர்களுக்கும் இங்கு நடக்கும் எந்தவொரு விடயத்தையும் புகைப்படம் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ வேண்டாமென கட்டளையிட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்தால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படுமெனவும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அப்பொழுது அங்கு கூடியிருந்த கிராமமக்கள், 'ஐயோ சார் அப்படியொன்றும் செய்ய வேண்டாம். நாங்கள் கேட்பது குடிப்பதற்கு தண்ணீர். எமக்கு பாரிய பிரச்சினையொன்று உள்ளது." என தன்மையாகக் கூறியதற்கு, பொல்லுகளால் அந்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேராவிற்குச் சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நீண்டகாலமாக வெளியாகும் கழிவுகளை அந்த பிரதேசங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதன் காரணமாக அந்த பகுதியிலுள்ள 10 கிராமங்களின் குடிநீரில் கலந்துள்ளதன் காரணமாக நீரில் விஷம் கலந்திருப்பதனால் பக்கள் பெரும் பாதிப்படைந்து அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தூய நீரை பவுசர்கள் மூலம் அந்த மக்களுக்கு வழங்குவதை விட்டுவிட்டு ராஜபக்ஷக்கள் மக்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக மங்கள் சமரவீரா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் ரத்துபஸ்வல பகுதியிலுள்ள வீடுகளுக்கு அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.(நன்றி- சிறிலங்காமிரர் – தமிழ்)

0 comments :
Post a Comment