
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை கனகா இன்று பிற்பகல் காலமானதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் அது மறுக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகை தேவிகா மகளும் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவருமான நடிகை கனகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அது அனாதைகள் மற்றும் கவனிப்பாரின்றி அவதிப்படுவோரை பராமரித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகும்.
இங்கு புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடிகை கனகாவும் சிகிச்சை பெறுவதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து, விஷயத்தை வெளியில் சொன்னார்.
அதன் பிறகுதான் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது.
இந்தநிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
எனினும் பின்னர் அவர் சென்னை வைத்தியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை கனகா நடித்த கரகாட்டக்காரன் படம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஓடி வெற்றிவாகை சூடியது. இந்தப் படத்திற்குப் பிறகு, கனகா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் பிஸியானார்.
இவர் தமிழில் ரஜினியுடன் அதிசயபிரவி, விஜயகாந்த்துடன் கோயில்காளை, பிரபு, கார்த்திக், ராம்கி உட்பட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கனகா முகேஷ்யுடன் இணைந்து நடித்த ‘காட்பாதர்’ என்ற படம் கேரளாவில் 200 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
கனகா, கடைசியாக நடித்தது ஒரு மலையாளப் படத்தில். அது 2004-ல் வெளியானது. அதன் பிறகு கனகா பற்றிய எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகாத கனகா தனது தாயின் பாதுகாப்பிலேயே இருந்து வந்தார் என்பதும், அவரது தாயான நடிகை தேவிகா 2002 இல் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment