
வடக்கில் தேர்தலில் மட்டுமல்லாமல், எல்லா விடயங்களிலுமே இராணுவம் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஜேவிபி கூறியுள்ளது.
´´யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகின்றன. எனவே சிவில் நிர்வாக நடவடிக்கைகள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவது, பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையில் தலையிடுவது போன்ற செயற்பாடுகளை இராணுவம் நிறுத்த வேண்டும்.
வடக்கில் இராணுவம் தனக்குரிய பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். பொலிசார் தமக்குரிய சிவில் நிர்வாகக் கடமைகளைச் செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகள் தமது வேலைகளைத் தாங்கள் செய்ய வேண்டும். இதுவே ஜேவிபியின் நிலைப்பாடு.´´ என அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கா வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்திற்குரிய வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
´´யுத்தம் முடிவடைந்ததையடுத்து வடபகுதி மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை இன்னும் தோன்றவில்லை. இராணுவம் ஆக்கிரமிப்பு செய்வதைப்போன்று வடக்கில் நிலை கொண்டிருக்கின்றது.
´´யுத்தம் முடிவடைந்ததையடுத்து வடபகுதி மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை இன்னும் தோன்றவில்லை. இராணுவம் ஆக்கிரமிப்பு செய்வதைப்போன்று வடக்கில் நிலை கொண்டிருக்கின்றது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுவே எமது நோக்கம்´´ என்றும் அவர் கூறினார்.(பிபிசி)
0 comments :
Post a Comment